ராணுவ வீரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதியளித்துள்ளார். மூன்று நாள் பயணமாக லடாக் எல்லைக்கு சென்றுள்ள ராஜ்நாத்சிங் நேற்று ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து எல்லை நிலவரத்தை ஆய்வு செய்தார். எல்லையில் இந்திய ராணுவத்தினரின் தயார் நிலையையும் தற்போதைய சூழலில் சீனப்படைகள் அமைதி காத்து வருவதையும் அதிகாரிகள் அவரிடம் விவரித்தனர். அப்போது அவர்களிடையே உரையாற்றிய ராஜ்நாத்சிங் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுக்கு அளித்த ஒரே ரேங்க் ஒரே ஓய்வூதியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றியதாகத் தெரிவித்தார்.ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இன்றும் அசல் எல்லைக் கோடு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ள நிலையில் எல்லைப் படையினர் கட்டிய புதிய மேம்பாலத்தையும் ராஜ்நாத்சிங் திறந்துவைக்கிறார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments