Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமது சம்பளத்தில் பாதியை வரியாக செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு

தான் வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் வரியாக செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தமது சொந்த கிராமம் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படவில்லை என்பதற்காக கோபமடைந்து வலுக்கட்டாயமாக நிறுத்துவதாகவும், சில நேரங்களில் ரயிலுக்கு தீவைப்பதாகவும் வேதனை தெரிவித்தார். இதனால் யாருக்கு இழப்பு என்று கேள்வி எழுப்பிய ராம்நாத் கோவிந்த், அவை அரசின் சொத்து- மக்களின் வரிப்பணம் என்றார். பொதுமக்கள் தேசத்திற்கு வரி செலுத்துவது கடமை என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், தாம் 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் அதில் மாதந்தோறும் 2லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரியாக செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments