இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் மாநாட்டில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய யூனியன் கோவிஷீல்ட்டுக்கு அங்கீகாரம் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஜி 20 நாடுகளில் 19 ஐரோப்பிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இத்தாலி அதற்கு தலைமை வகிக்கிறது. இத்தாலியின் மாதேராவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ஜெய்சங்கர் கொரோனாவுக்கு எதிரான சவால்களை சந்திக்க தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவற்றுக்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments