இன்றைய பஞ்சாங்கம்
28.6. 21 ஆனி 14 திங்கள்கிழமை
திதி: சதுர்த்தி மாலை 6.40 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை
எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை
நல்லநேரம்: காலை 6.15 முதல் 7.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம்: புனர்பூசம்
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
நாம் செய்த வேண்டுதல்களுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா?
நன்மையும் தீமையும் இணைந்ததுவே வாழ்க்கை. நன்மைகள் வரும்போது மகிழும் நாம் தீமைகள் வரும்போது கலங்கிவிடுகிறோம். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தானே துணை! நல்ல வழிகாட்டுமாறு இறைவனை நோக்கி ஓடுகிறோம். இக்கட்டான தருணங்களில், இறைவனை நாடி வணங்கித் துன்பம் தீர்ந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதாகவும் வேண்டிக்கொள்வோம். இறையருளால் விரைவில் அந்தத் துன்பமும் தீரும். இந்த நிலையில் நாம் வேண்டிக்கொண்டபடி வேண்டுதல்களை நிறைவேற்றவேண்டும் அல்லவா...
சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதை நம் கரங்களால் செலுத்த முடியாதபோது அதைப் பிறர்மூலம் செலுத்துவோம். அப்படி நாம் வேண்டிக்கொண்ட வேண்டுதலை நமக்காகப் பிறர் செலுத்தலாமா என்ற கேள்விக்கான விடையினை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய ராசிபலன்
மேஷம்:
அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்ளலாம். பிற்பகலில் நண்பர்களோடு பேசுவது மகிழ்ச்சி தரும். - ஆல் தி பெஸ்ட்!
ரிஷபம்:
வரவு : தேவையான பொருள்வரவு கிடைக்கும் நாள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய செலவுகள் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் நன்மைகள் நடைபெறும் நாள். - என்ஜாய் தி டே!
மிதுனம்
சோர்வு : பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வும் உடலில் அசதியும் ஏற்படும். வழக்கமான பணி என்றாலும் கவனத்துடன் செய்வது அவசியம். - கேர் ஃபுல் ப்ளீஸ்!
கடகம்
கவனம் : செயல்களில் கவனம் தேவை. சகோதர உறவுகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்துப் போகவும். பணவரவு உண்டு. - டேக் கேர் ப்ளீஸ்!
சிம்மம்:
சாதகம் : செயல்கள் வெற்றியாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் வாய்ப்புண்டு. உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். - சாதகமான ஜாதகம் இன்று!
கன்னி:
தாமதம் : செயல்களில் சிறு சிறு தடைகளும் தாமமும் ஏற்படும். பணவரவு இருப்பதால் செலவுகள் குறித்த கவலை இருக்காது. பேசும்போது பேச்சில் பொறுமை அவசியம். - நா காக்க!
துலாம்:
நிதானம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். குடும்பத்தினரின் கருத்துகளைக் கேட்டு நடக்க வேண்டிய நாள். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். - ஆல் இஸ் வெல்!
விருச்சிகம்:
உற்சாகம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும் நாள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் பணவரவும் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். - ஜாலி டே!
தனுசு:
ஆரோக்கியம் : நன்மைகள் நடைபெறும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உணவு விஷயங்களில் அக்கறை தேவை. - ஹெல்த் இஸ் வெல்த்!
மகரம்:
பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். உறவினர்களால் மன வருத்தம் ஏற்படும் என்பதால் தேவையற்ற பேச்சைத் தவிர்ப்பது நல்லது. - இதுவும் கடந்து போகும்!
கும்பம்:
சிந்தனை : அனைத்து விஷயங்களிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் குடும்பத்தினரோடு ஆலோசனை செய்வது அவசியம் - வருமுன் காப்போம்!
மீனம்
மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். - இனி எல்லாம் சுபமே!
from Latest News
0 Comments