இன்றைய பஞ்சாங்கம்
29. 6. 21 ஆனி 15 செவ்வாய்க்கிழமை
திதி: பஞ்சமி மாலை 6.09 வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: சதயம்
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை
எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை
நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.15 வரை/ பகல் 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம்: பூசம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
வழிபடவேண்டிய தெய்வம்: ஷண்முகக் கடவுள்
நடைபாதைகளில் உருவாகும் திடீர் கோயில்களை ஆதரிக்கலாமா?
நம் தேசமெங்கும் கோயில்கள் நிறைந்துள்ளன. பழைமையான கோயில்கள் மற்றும் புதிய கோயில்கள் எனப் பல்வேறு கோயில்கள் இருந்தபோதும் தினமும் ஒரு புதிய கோயில் உருவாகிக்கொண்டே இருக்கிறது. அவற்றிலும் சில கோயில்கள் திடீரென்று உருவாகிவிடுகின்றன. இப்படிப்பட்ட கோயில்களில் வணங்கலாமா என்னும் கேள்வி அநேகருக்குள் வந்தாலும் இறைவன் எங்கும் இருப்பன் என்னும் உணர்வில் அங்கும் நின்று ஒருகணம் வணங்கிவிட்டுத்தான் செல்வோம். சில வேளைகளில் ஒரு மரத்தடியில் கோயில்கள் உருவாகும். சிலவோ பொதுமக்களின் நடைபாதைகளில் சாலையின் மத்தியில் என்று உருவாகும்போது மக்களுக்கு சிரமம் ஏற்படும். இதுபோன்ற வேளையில் பக்தர்களின் நிலைமை மிகவும் தர்ம சங்கடமானது. வணங்குவதா வேண்டாமா என்னும் சந்தேகமும் அந்தக் கோயில்களுக்குத் தம் ஆதரவைத் தெரிவிக்கலாமா என்னும் குழப்பமும் ஏற்படும். நவீன காலத்தின் இந்த பிரச்னைக்கான பதில் குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய ராசிபலன்
மேஷம்:
உதவி : எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். செயல்களும் அனுகூலமாகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் என்றாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம்.- சிக்கனம் தேவை இக்கணம்!
ரிஷபம்:
மகிழ்ச்சி : செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கச் சிந்தித்துச் செயல்படவும். - ஆல் இஸ் வெல்!
மிதுனம்
அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பண உதவிகளும் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நற்செய்திகள் தேடிவரும். - ஆல் தி பெஸ்ட்!
கடகம்
பொறுமை : இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு சிந்தித்து எடுப்பது நல்லது. சொற்களிலும் கவனம் தேவை. பொறுமை அவசியம். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!
சிம்மம்:
சுறுசுறுப்பு : காலைமுதலே சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும். - என்ஜாய் தி டே!
கன்னி:
சாதகம் : அனைத்துவிதத்திலும் அனுகூலம் நிறைந்த நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு மனதை மகிழ வைக்கும். - சாதகமான ஜாதகம் இன்று!
துலாம்:
கவனம் : செயல்களில் நிதானமும் கவனமும் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். தேவையில்லாத குழப்பங்களை மனதிலிருந்து நீக்குங்கள். - டேக் கேர் ப்ளீஸ்!
விருச்சிகம்:
வெற்றி : புதிய முயற்சிகள் வெற்றியாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். நன்மைகள் நடைபெறும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். - வெற்றிக்கொடிகட்டு!
தனுசு:
வரவு : இன்று பணவரவும் பொருள்சேர்க்கையும் உண்டாகும். குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. - நா காக்க!
மகரம்:
ஆரோக்கியம் : மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உடலிலும் சின்னச் சின்ன உபாதைகள் உண்டாகலாம். பொறுமையுடன் செயல்படுங்கள். - ஹெல்த் இஸ் வெல்த்!
கும்பம்:
அன்பு : குடும்பத்தினர் உங்கள் மேல் பாசமழை பொழிவார்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். முடிவுகள் எடுக்கும் போது கூடுதல் கவனம் தேவை. - ஜாலி டே!
மீனம்
பிரச்னை : சின்னச் சின்னப் பிரச்னைகள் தோன்றி மறையும். தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் நற்செய்திகள் தேடிவரும். - இறைவன் இருக்க பயம் ஏன்?!
from Latest News
0 Comments