Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் அளித்தால் 8 லட்சம் டாலர் வெகுமதி..! -கொலம்பிய அரசு

கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கியால் சுட்டவர் குறித்து தகவல் தருபவர்களுக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர் வெகுமதி அளிக்கப்படும் என கொலம்பிய அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டு அதிபர் இவான் டியூக், தலைநகர் போகோடாவில் இருந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் வெனிசுலாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கோகட்டா நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது தீவிரவாதிகள் அவரது ஹெலிகாப்டரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இவான் டியூக் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் 3 பில்லியன் கொலம்பிய பெசொஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கோகட்டா எல்லையில் ஏகே 47 மற்றும் 7.62 கேலிபர் ரைபிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments