வெப்பசலனம் மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு மீன்ப்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments