Ticker

6/recent/ticker-posts

Ad Code

கோவின் இணையதள சேவையை 50 நாடுகளுக்கு வழங்க திட்டம்

விரைவில் கோவின் இணையதள சேவையை 50 நாடுகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தேசிய சுகாதார நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்துள்ளார். மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த கனடா, மெக்சிகோ, பனாமா, நைஜீரியா உள்ளிட்ட 50 நாடுகள் கோவின் இணையதள சேவையை பெற விருப்பம் தெரிவித்து உள்ளதாக ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் கோவின் இணையதளம் குறித்த தகவல்களும் பகிரப்படும் என்றும் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடக்க உள்ள சர்வதேச மாநாட்டில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஷர்மா குறிப்பிட்டார். கோவின் இணையதளத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், இ-வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டு கோவின் இணையதளம் மூலம் பயனர்கள் நேரடியாக மருத்துவக் கட்டணம் செலுத்தி மருத்துவ சேவை பெறும் முறை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments