மத்தியப் பிரதேசத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுக்கள் சிக்கின. பாலகாட் என்ற இடத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் ரகசிய ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓரிடத்தில் கள்ள நோட்டு அச்சிடப்படுவது தெரியவந்தது. குறிப்பிட்ட பகுதியில் 10 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு மதிப்புகளில் பணத்தாள் அச்சிடப்பட்டிருந்தன. இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர். இதேபோல், மகாராஷ்டிரா அருகே உள்ள கோண்டியா என்ற இடத்தில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட்டதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments