வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென் மற்றும் உள் மாவட்டங்கள் உள்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 1, 2 ஆகிய தேதிகளில் சேலம் திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும், 3-ந் தேதி அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments