Ticker

6/recent/ticker-posts

Ad Code

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் என பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. 1, 2 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 4 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments