Ticker

6/recent/ticker-posts

Ad Code

மகாராஷ்ட்ராவில் நள்ளிரவு போதைப் பார்ட்டியில் ஆட்டம் போட்ட 4 நடிகைகள் உள்பட 22 பேர் சுற்றி வளைத்து கைது

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்ற 4 நடிகைகள் உட்பட 22 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மாடல் அழகிகள், தொலைக்காட்சி பிரபலங்கள், உள்ளூர் பிரபலங்கள் உட்பட பலர் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் நாசிக் அருகே உள்ள சொகுசுபங்களாவில் திரண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்ற போது பலர் சுயநினைவில்லாமல் அரைகுறை ஆடைகளுடன் போதையில் கும்மாளம் போட்டுக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 4 நடிகைகள் உட்பட 12 பெண்களையும் 10 ஆண்களையும் போலீசார் கைது செய்தனர். விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் தலைமறைவாகிவிட்டார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments