நாடு முழுவதும் இதுவரை 34ஆயிரத்து 760 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ரயில்வேதுறை வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ ஆக்சிஜனை எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு இதுவரை ஆயிரத்து 976 டேங்கர்களில் 34ஆயிரத்து 760 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments