மத்திய அரசின் இலவச தொகுப்பில் இருந்து 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளதால் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்குகிறது. விமானம் மூலம் நேற்று மாலையில் சென்னை வந்தடைந்த கோவிஷீல்டு தடுப்பூசிகள், பாதுகாப்பாக தேனாம் பேட்டைD.M.S வளாகத்தில் உள்ள அரசு மருந்து கிடங்குக்கு கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. தமிழ்நாட்டுக்கு ஜூலை மாத ஒதுக்கீடாக 71 லட்சம் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments