Ticker

6/recent/ticker-posts

Ad Code

கூடன்குளத்தில் மேலும் 2 அணுஉலைகள் அமைக்கும் பணி இன்று தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், 5வது மற்றும் 6வது அணுஉலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கப்படுகின்றன. நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. 3,வது 4வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை 2024ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் ரஷ்யா மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கூடங்குளம் வளாகத்தில் 5வது மற்றும் 6வது அணு உலைகளின் முதற்கட்ட பணிகள் கடந்த 2018ம் ஆண்டு பூமிபூஜையுடன் துவங்கின. இந்த இரு அணுமின் திட்டங்களும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ளன.  இவ்விரு அணு உலைகளை அமைக்க ரஷ்யா இந்தியாவுக்கு சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் கையெழுத்து போன்ற பணிகள் நடந்து வந்தன. அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து 5 வது மற்றும் 6வது அணு உலைகள் அமைப்பதற்கான காங்கிரிட் கட்டுமான பணிகள் இன்று காலை 11 மணிக்கு கூடன்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் துவங்கப்பட உள்ளன. இந்தப் பணிகளை இந்திய அணுசக்தி துறையின் செயலாளர் கே.என்.வியாஸ் மும்பையில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதில் கூடங்குளம் அணுஉலை அதிகாரிகள், ரஷ்ய விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments