இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கிருமி, கிழக்கு ஆசியப் பகுதியில் கடந்த 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உலகெங்கிலும் உள்ள 26 வெவ்வேறு மக்கள்தொகைகளில் இருந்து 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்களின் மரபணுக்களை ஆய்வு செய்தனர். இதில் கிழக்கு ஆசியாவில் உள்ள நவீனகால மக்கள் மீது கொரோனா வைரசின் டி என் ஏ எனப்படும் மரபணுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். சீனா, ஜப்பான் மற்றும் வியட்நாமில் அமைந்துள்ள ஐந்து வெவ்வேறு மக்கள்தொகைகளில் ஒரு கொரோனா வைரஸ் தொடர்பான இந்த மரபணு சமிக்ஞைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த வைரஸ்தான் பிற்காலத்தில் கொரோனா என்றும் பிளேக் நோயாகவும் உருமாறியிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments