பேஸ்புக் நிறுவனம் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ஒரேநாளில் அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1 டிரில்லியன் டாலர் அளவை எட்டியது. சிறு குறு நிறுவனங்களை அச்சுறுத்துவது, ஏகபோகமாக செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பேஸ்புக் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் அந்நிறுவனத்தின் இதர சமூக வலைதள பக்கங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவைகளை விற்க வழிவகை செய்ய கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொலம்பியா மாகாண நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து ஒரே நாளில் பேஸ்புக் சந்தை மதிப்பு கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அந்நிறுவன பங்குகள் 4 சதவிதம் உயர்ந்து ஒட்டுமொத்த சந்தை மூலதனம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டியது. மேலும் 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை எட்டிய அமெரிக்க நிறுவனங்களில் ஆப்பிள், மைக்ரோசாப்ட்,அமேசான், கூகுள் ஆல்பபெட் நிறுவனங்கள் வரிசையில் 5-வது நிறுவனமாக பேஸ்புக் முன்னேறியது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments