நேபாளத்தில் கன மழைக்கு 16 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா 2-வது அலையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள நேபாளத்தில் கனமழை கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நேபாளம் காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருவதாகவும், கனமழையால் 11 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும், 30 பேர் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் காத்மண்டு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் கனமழைக்கு சேதமடைந்து பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழையால் ஏறத்தாழ 18 லட்சம் பேர் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments