முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல் நலக் குறைவால் காலமானார்.
புற்றுநோய்க்காக சென்னை ரேலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு 7.05 மணிக்கு உயிர் பிரிந்தது. சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரியின் உயிர் பிரிந்ததாக சென்னை ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய்க்காக 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மறைந்த பரமேஸ்வரிக்கு பெரம்பலூரில் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
<iframe src="https://ift.tt/3bY4Bi7" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments