Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாவட்ட அதிகாரியும் பொறுப்பு: உச்ச நீதிமன்றம்

கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாவட்ட அதிகாரியும் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெருந்தொற்று பாதிப்பால் 577 குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி விட்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எல் நாகேஸ்வரராவ், நீதிபதி அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகளின் நிலை குறித்து கோபத்தை வெளிப்படுத்திய நீதிபதிகள், மார்ச் 2020 முதல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை இன்று மாலைக்குள் தேசிய குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments