இன்றைய பஞ்சாங்கம்
30. 5. 21 வைகாசி 16 ஞாயிற்றுக்கிழமை
திதி: சதுர்த்தி காலை 9.03 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: உத்திராடம் இரவு 9.52 வரை பிறகு திருவோணம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை
நல்லநேரம்: காலை 6 முதல் 7 வரை/ பகல் 3.15 முதல் 4.15 வரை
சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் இரவு 9.52 வரை பிறகு திருவாதிரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
சாமியை வேண்டிக் கைகளில் கயிறு கட்டிக்கொள்வது ஏன்?
சிலர் கைகளில் பல வண்ணங்களில் கயிறு கட்டியிருப்பதைக் கண்டிருப்போம். விரத காலங்களிலும் பூஜையில் மஞ்சள் கயிறுகளை வைத்து பூஜை செய்து அதைக் கட்டிக்கொள்வதும் உண்டு. திருப்பதி, காசி என்று தீர்த்தயாத்திரை சென்று வருபவர்களும் இதுபோன்ற கயிறுகளைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஒரு சிலர் கரங்களில் வளையல் அடுக்குகள் போலக் கயிறுகள் கட்டியிருப்பதையும் பார்த்திருக்கிறோம். இப்படியான கயிறுகளை ரட்சை அல்லது காப்பு என்று சொல்வார்கள். கை மணிக்கட்டுகளில் மட்டுமல்ல சிலர் முன்கைகளிலும் அணிந்திருப்பார்கள். இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது? இவ்வாறு கயிறு கட்டிக்கொள்வதால் நன்மைகள் நடைபெறுமா என்பன குறித்த தகவல்களை அறிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய ராசிபலன்
விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேஷம்
உற்சாகம் : மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தினர் உங்கள் மனம் மகிழும்படி நடந்துகொள்வார்கள். ஆரோக்கியமும் மேம்படும். - ஜாலி டே!
ரிஷபம்
தெளிவு : முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் ஏற்படும் நாள். நேற்றுவரையிருந்த குழப்பங்கள் நீங்கும். செலவுகளில் கட்டுப்பாடு தேவை. - நாளை உங்க நாள்!
மிதுனம் -
நிதானம் : முக்கிய வேலைகளை முற்பகலிலேயே முடித்துவிடுங்கள். பிற்பகலுக்கு மேல் செயல்களில் நிதானம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். - டேக் கேர் ப்ளீஸ்!
கடகம்
அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. பிற்பகலுக்கு மேல் சகோதர உறவுகளால் வீண் செலவு ஏற்படும். - ஆல் தி பெஸ்ட்!
சிம்மம்
கவனம் : உணவு விஷயங்களில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். - சவாலே சமாளி!
கன்னி
பணவரவு : இன்று பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கும். என்றாலும் சகோதர வகையில் உண்டாகும் பிரச்னைகளால் மனம் கவலை கொள்ளும். - கேர் ஃபுல் ப்ளீஸ்!
துலாம்
ஆதாயம் : குழப்பங்கள் மறையும். செயல்கள் ஆதாயமாக முடியும். குடும்பத்தில் பேசும்போது கவனம் தேவை. தேவையின்றிப் பயணம் வேண்டாம். - ஆல் இஸ் வெல்!
விருச்சிகம்
விவாதம் : உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்துப் போகவும். குறிப்பாக விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. - நோ ஆர்கியுமென்ட்ஸ்!
தனுசு:
சுறுசுறுப்பு : அனைத்து விதத்திலும் புத்துணர்ச்சி கொள்ளும் நாள். பணவரவு உண்டு. இறைவழிபாட்டில் மனம் செல்லும். மனக்கசப்புகள் நீங்கும். - என்ஜாய் தி டே!
மகரம்
செலவு : பணவரவு காணப்பட்டாலும் செலவு அதற்கும் மேல் இருக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். இழுபறியாக இருந்வை சாதகமாகும். - செலவே சமாளி!
கும்பம்
பொறுமை : அனைத்தும் சாதகமாக இருந்தபோதும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் காரணமின்றி சச்சரவுகள் வந்துபோகும். பொறுமை அவசியம். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!
மீனம்
மகிழ்ச்சி : உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாள். சகோதர வகையில் செலவுகள் அதிகரித்தாலும் அதனாலும் மகிழ்ச்சியே உண்டாகும். - இனி எல்லாம் சுபமே!
from Latest News
0 Comments