கர்நாடகாவில் இரு சிறுவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கும், சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கும் கருப்புப் பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவரின் உடல் நிலையும் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனா தாக்கிய ஒரு சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதும், இதுவரை பெரியவர்களுக்கு மட்டுமே அதன் பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது. தற்போது இந்த நோயால் சிறுவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments