Ticker

6/recent/ticker-posts

Ad Code

வாடிப்பட்டி டு வங்கதேசம்: ஆச்சர்யமூட்டும் சரக்கு ரயில் போக்குவரத்து... மதுரை ரயில்வே கோட்டம் சாதனை!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து வங்கதேசத்திற்கு ரயில் மூலம் 100 டிராக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 4-வது முறையாக நடந்த இப்போக்குவரத்து மூலம் மதுரை ரயில்வே கோட்டம் சாதனை படைத்து இருக்கிறது.

டாஃபே நிறுவனத்தின் டிராக்டர் உற்பத்தி ஆலை வாடிப்பட்டியில் அமைந்துள்ளது. இங்கு தயாராகும் டிராக்டர்கள் நாட்டின் பல மாநிலங்களுக்கும் ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் வங்கதேசத்துக்கு ரயில் மூலம் 100 டிராக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிதியாண்டில் வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் முதல் சரக்கு ரயில் இதுவாகும்.

வங்க தேசம் செல்ல காத்திருக்கும் டிராக்டர்கள்

கடந்த நிதியாண்டில் இதுபோல 3 சரக்கு ரயில்கள் வாடிப்பட்டியில் இருந்து வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்காக வடிவைமைக்கப்பட்ட சரக்கு பெட்டிகள் வங்கதேசத்திலுள்ள பேனாபோல் (Benapole) ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தென் மாவட்டத்திலிருந்து மற்றொரு நாட்டுக்கு ரயில் மூலம் சரக்குப் போக்குவரத்து நடைபெறுவது இதுவே முதல்முறை. இந்தச் சரக்கு போக்குவரத்தின் மூலம் மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் ரூ.23,15,962 வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் இதன் மூலம் ரயில்வேக்கு வருவாயும், டிராக்டர் நிறுவனத்துக்கு போக்குவரத்துச் செலவும் குறைந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.



from Latest News

Post a Comment

0 Comments