மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த இடைக்காலத் தடை விதித்துள்ள கிழக்கு கரீபியன் உச்சநீதிமன்றம், தடையை மேலும் நீட்டித்து சோக்சி தனது வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதியளித்துள்ளது. ஆண்டிகுவாவில் குடியுரிமை பெற்ற மெகுல் சோக்சியை பஞ்சாப் நேஷனல் வங்கியின் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி விவகாரத்தில் விசாரணை நடத்த இந்திய சிபிஐ அதிகாரிகள் முயன்று வருகின்றனர். கியூபா தப்பிச் செல்ல திட்டமிட்ட மெகுல் சோக்சி டொமினிக்கன் தீவில் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தமக்கென சட்டக்குழுவினரை நியமித்த சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க , கரீபியன் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இத்தடையை ஜூன் 2ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. சோக்சி தமது வழக்கறிஞர்களை சந்திக்கவும் , சிறையிலிருந்து சோக்சியை மருத்துவமனைக்கு மாற்றவும் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments