தெலங்கானாவில் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்று மாத குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தாயாக மாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம், நிர்மல் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி இரண்டு மாத குழந்தையுடன், பெங்களூருவில் பணிபுரிந்த வந்த நிலையில், குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, பைன்சா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் கார் ஓட்டுநராக பணிபுரியும் மகேந்தர் என்பவர் தம்பதியை கவனித்து வரும் நிலையில், மூன்று மாத குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை கண்ட கார் ஓட்டுனர், அதே மருத்துவமனையில் பணியாற்றும் தனது மனைவி சுனிதாவிடம் கூறியுள்ளார். அவரும் தொற்று அச்சமின்றி குழந்தையை வீட்டிற்கு தூக்கி சென்று தாய்ப்பால் கொடுத்து பராமரித்த நிலையில், குழந்தைக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நன்கு கவனித்து வந்தார். தற்போது கொரோனா தொற்றில் இருந்து தம்பதி மீண்ட நிலையில் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் தாயுள்ளம் கொண்ட செயலை கண்டு அப்பகுதி மக்கள், செவிலியர்கள் மனதார பாராட்டினர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments