Ticker

6/recent/ticker-posts

Ad Code

சென்னையில் நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு

சென்னையில் நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும் என  மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடை வியாபாரிகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருள்களை நாளை  முதல் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும் காய், பழங்கள், மளிகைப் பொருள்களை வாகனங்கள் மூலம் கொண்டு வருவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில்லறை வியாபாரிகள் விற்பனைக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கோயம்பேடு மற்றும் கொத்தவால்சாவடி ஆகிய இடங்களில் உள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அவர்களின் வாகனங்களுக்கு மண்டல அலுவலகங்களில் இன்று அனுமதிச்சீட்டு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.  நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களிலிருந்து அத்தியாவசியப் பொருள்களை மட்டும் மின்னணு வர்த்தகத்தின் மூலம் அரசின் வழிமுறைகளின்படி விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments