இன்றைய பஞ்சாங்கம்
29. 5. 21 வைகாசி 15 சனிக்கிழமை
திதி: திரிதியை காலை 10.53 வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: பூராடம் இரவு 10.38 வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை
நல்லநேரம்: காலை 7.30 முதல் 8 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்: ரோகிணி இரவு 10.38 வரை பிறகு மிருகசீரிடம்
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்
இன்று: சங்கடஹர சதுர்த்தி
இறைவழிபாட்டில் மனம் ஒன்றியிருக்க என்ன செய்ய வேண்டும்?
சிலர் தினமும் இறைவழிபாடு செய்வார்கள். சிலர் விரும்பும்போது வழிபாடு செய்வார்கள். எப்போது வழிபாடு செய்தாலும் அதில் மனம் ஒன்றியிருக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் சில நேரங்களில் அது சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது. மனம் ஒன்று செயல் ஒன்றாக இருந்தால் செய்யும் வழிபாட்டில் பலன் இல்லாமல் போய்விடும். மனமே இந்த உலகில் ஒருவரால் அடக்க முடியாத ஒரு வஸ்துவாக இருக்கிறது. மனதை வென்றவரையே மகாவீரர் என்கிறோம். அப்படிப்பட்ட வலிமை மிக்க மனம் வழிபாடுகளில் ஒன்றியிருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய ராசிபலன்கள்
இன்றைய விரிவான பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேஷம்
பொறுமை : எதிலும் பொறுமை தேவை. எதிர்பாராத பணவரவு ஏற்படுவது மகிழ்ச்சியளிக்கும். உறவினர்களோடு மோதல் வேண்டாம். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!
ரிஷபம்
செலவு : சந்திராஷ்டமம் தொடர்வதால் நிதானம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். - டேக் கேர் ப்ளீஸ்!
மிதுனம்
தன்னம்பிக்கை : மனதில் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். - நம்பிக்கை அதுதானே எல்லாம்!
கடகம்
வெற்றி : முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. - நல்லதே நடக்கும்!
சிம்மம்
அலைச்சல் : முடிவெடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுக்கவும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!
கன்னி
நன்மை : மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்திருக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி தேடிவரும். செலவுகள் அதிகரிக்கும். - நாள் நல்ல நாள்!
துலாம்
அனுகூலம் : மறைமுக எதிர்ப்புகள் முடியும். இழுபறியாக இருந்த ஒரு காரியம் சாதகமாக முடியும். உறவினர்களின் மூலம் ஆதாயமும் கிடைக்கும். - ஆல் தி பெஸ்ட்!
விருச்சிகம்
உற்சாகம் : கவலைகள் விலகும். உற்சாகம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். - ஆல் இஸ் வெல்!
தனுசு:
நிதானம் : அனைத்தும் சாதகமாக இருந்தபோதும் சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். - நோ ஆர்கியுமென்ட்ஸ்!
மகரம்
நற்செய்தி : எதிர்பார்த்த நற்செய்தி வந்துசேரும். குடும்பத்திலிருந்த சின்னச் சின்னக் குழப்பங்களும் மறையும். உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். - என்ஜாய் தி டே!
கும்பம்
பிரச்னை : சகோதர உறவுகளால் சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். செலவுகள் அதிகரிப்பது கவலைதரும். நண்பர்கள் உதவி கேட்பார்கள். - சவாலே சமாளி!
மீனம்
ஆரோக்கியம் : செலவுகள் அதிகரித்தாலும் பணவரவும் இருக்கும். காரியங்கள் அனுகூலமாகும். என்றாலும் உணவு விஷயங்களில் அக்கறை தேவை. - ஹெல்த் இஸ் வெல்த்!
from Latest News
0 Comments