சென்னையில் மளிகை பொருட்களை நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யும் திட்டம் இன்றுதொடங்கியது. இதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள்,நடமாடும் வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று விற்பனை செய்வதற்காக 2197 கடைக்காரர்கள் அனுமதி பெற்றுள்ளனர். விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனைப்பயன்படுத்தி, ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்களின்களின் மூலம் மளிகை பொருட்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments