சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கோவை எந்த வகையிலும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், தளர்வுகளில்லா ஊரடங்கை அமல்படுத்தியால் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், அடுத்த ஊரடங்கை அறிவிக்கும்போது தளர்வுகள் பற்றி யோசித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால் உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு தடுப்பூசி ஆலைக்கு அனுமதியளிக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர், சென்னைக்கு அடுத்ததாக கோவையில்தான் தடுப்பூசி அதிகமாகப் போடப்பட்டுள்ளாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், கோவைக்கு இரண்டு முறை மட்டுமல்ல, தேவைப்பட்டால் இரண்டு நாட்கள் கழித்துக்கூட மீண்டும் கோவைக்கு வருவதாகவும் கூறினார். அதனால் கோவை புறக்கணிக்கப்படுவது என்பது அல்ல என்று பேசிய அவர், ஒட்டுமொத்த தமிழ்நாட்டைப் பாதுகாப்பதும் தனது முதல் பணி என்றும் தெரிவித்தார். ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்த ஊரடங்கு முழுமையான ஊரடங்கு இல்லை சிலர் குறை சொல்வதாகவும், கடுமையாக்கப்பட்டால் கடுமையான ஊரடங்கு என்று கூறிய முதலமைச்சர், இந்த முடிவு அனைத்துக் கட்சி குழு அமைத்து எடுக்கப்பட்ட முடிவு என்று தெரிவித்தார். முன்னதாக ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments