Ticker

6/recent/ticker-posts

Ad Code

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கினுடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு அளவில் துணை நிற்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கின் உறுதியளித்துள்ளார். 5 நாள் சுற்றுப்பயணமாக வாஷிங்டன் சென்றுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பிளிங்கினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நல்லுறவுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கான் படைக்குறைப்பு, இந்தோ பசிபிக் தடையற்ற வர்த்தகம் போன்ற பிரச்சினைகளும் ஆலோசிக்கப்பட்டன. 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments