உள்நாட்டு விமானக் கட்டணம் ஜூன் மாதத்தில் இருந்து 15 சதவீதம் அதிகரிக்க உள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக விமான சேவைகள் குறைக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்த நிலையில் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பராமரிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இதையடுத்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறைந்தபட்ச கட்டணத்தில் 15 சதவீதம் உயர்த்த உத்தரவிட்டுள்ளது. மேலதிக பயணக் கட்டணத்தில் மாற்றம் ஏதுமில்லை. புதிய கட்டணம் ஜூன் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. 40 நிமிடங்கள் பறக்கக்கூடிய விமானக் கட்டணம் 2300 ரூபாயில் இருந்து 2600 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதே போன்று 60 நிமிடங்கள் பறக்கக்கூடிய விமானக் கட்டணம் 2900 ரூபாயில் இருந்து 3300 ரூபாயாக உயர்கிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments