Ticker

6/recent/ticker-posts

Ad Code

கோவின் இணையதள பக்கத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்

கோவின்’ இணையதள பக்கத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 40 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கோவின் இணையதள பக்கத்தில் பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போடச் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியாக தடுப்பூசி மையத்திற்கே சென்று அங்கு பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் ’உருவாக்கப்பட்டுள்ள கோவின்’ இணையதள பக்கத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளோர் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில் தடுப்பூசி போடப்படும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments