சிவகங்கை மாவட்டத்தில் நான்கரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் அக்ரம் (21) என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். குடியிருப்பின் மேல்மாடியில் நான்கரை வயது பெண் குழந்தை அவரது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அக்ரமை பார்க்க அவரது நண்பர்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்போது குழந்தையை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குழந்தையை காணவில்லை என்று அவரது தாய் தேடும் போது மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அக்ரம் மற்றும் அவரது நண்பர்கள் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து குழந்தையின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் இளைஞர்களை அழைத்து விசாரித்ததில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் வாக்கு மூலம் அளித்ததை அடுத்து அக்ரம், அப்துல் முகமது யாகூப், நாகூர் கனி, யூசுப் அன்சாரி, சுலைமான், விஜயராகவன் ஆகிய ஆறு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments