கேரளாவில் தென்மேற்குப் பருவமழை 2 நாள் தாமதமாக ஜூன் 3ம் தேதியன்று தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1 முதல் தென்மேற்கு காற்று மேலும் படிப்படியாக வலுப்பெறக்கூடும், இதன் விளைவாக கேரளாவில் மழைப்பொழிவு அதிகரிக்கும். எனவே கேரளா மீது பருவமழை தொடங்குவது ஜூன் 3 ஆம் தேதி வரை ஏற்பட வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மொகபத்ரா தெரிவித்துள்ளார். மேலும் வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்த்ததாகவும், 2 நாட்கள் தாமதமாக மழைப்பொழிவு தொடங்கும் என குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம் நடப்பாண்டு பருவமழை சாதாரணமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments