Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழகத்தில் மேலும் குறையும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 30,016 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

தமிழகத்தில் நேற்று 31, 079 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மேலும் 2,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,692 பேரும், செங்கல்பட்டில் 1314 பேரும், கடலூரில் 590 பேரும், தர்மபுரியில் 356 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றிற்கு ஒரே நாளில் அரசு மருத்துவமனையில் 305 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 181 பேரும் என 486 பேர் உயிரிழந்துள்ளளனர். சென்னையில் ஒரே நாளில் கொரோனா தொற்றிற்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூல பலி எண்ணிக்கை 23,261 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 31,759 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3.10 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் எட்டாவது நாளாக ஒருநாள் மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து 17 வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments