Ticker

6/recent/ticker-posts

Ad Code

உ.பி.யில் கள்ளச்சாராய உயிரிழப்பு 22 ஆக உயர்வு

உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அலிகார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கள்ளச்சாராயம் தயாரித்து விற்கப்பட்டதில் அதனை வாங்கி அருந்திய அருகாமை கிராமத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அன்றைய தினமே 7 பேர் உயிரிழந்த நிலையில் மறுநாள் சனிக்கிழமை இந்த பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. இந்த நிகழ்வு தொடர்பாக சாராயக்கடை உரிமையாளர், விற்பனையாளர் என 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜே என் எம் மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து 10 பேர் மரணித்ததால் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments