வங்கியியல் ஒழுங்கு முறைச் சட்டங்களை மீறியதற்காக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி விடுத்துள்ள அறிக்கையில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிதி சாராத பொருட்களை விற்பனை செய்தல், வாகனக் கடன் வழங்குவதில் முறைகேடு என ஹெச்டிஎஃப்சி வங்கி மீது அடுத்தடுத்து புகார்கள் வந்ததாகத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த வங்கிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு ஹெச்டிஎஃப்சி வங்கி அளித்த பதில் திருப்தியில்லாத காரணத்தால் அந்த வங்கிக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments