ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், இதுவரை கொரோனா இரண்டாம் அலை எட்டிக் கூடப்பார்க்கவில்லை என்பதை வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்டாக் அருகே உள்ள சுமார் 1,028 கிராமங்கள் எதிலும் இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை. எனவே, கட்டாக் மாவட்ட நிர்வாகம் இந்த கிராமங்களை பச்சை மண்டலங்களாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் இந்தக் கிராமங்களில் மிகச் சிறப்பான பின்பற்றப்படுவது மட்டுமின்றி கிராம நிர்வாகங்கள் கண்காணித்து வருவது தான் இதற்கு காரணமாகும்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments