Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஜி.கே.மணி: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

பென்னாகரம் தொகுதியிலிருந்து 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இரண்டு முறை எம்.எல்.ஏ- வாக  தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக தலைவர் ஜி.கே. மணி, இந்த முறை மீண்டும் இத்தொகுதியில் களமிறங்கி உள்ளார். பென்னாகரம் தொகுதி வன்னிய சமூகத்தினர் அதிகமாக உள்ள தொகுதி. ஆனாலும், கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி  இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியது அக்கட்சியினருக்கு  எதிர்பாராத அதிர்ச்சியாகத்தான் அமைந்தது. அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் பி.என்.பி. இன்பசேகரன் 76,848 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அன்புமணி ராமதாஸ் 58,402 வாக்குகளும், அதிமுகவின் கே.பி. முனுசாமி 51,684 வாக்குகளும் பெற்றனர்.

ஜி.கே. மணி

இந்த நிலையில், இந்த முறை அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருப்பதால், அந்தக் கட்சியின் வாக்குகளையும் சேர்த்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற தெம்பில் களமிறங்கினார் ஜி.கே. மணி. அவரை எதிர்த்து திமுக சார்பில் மீண்டும் இன்பசேகரனும்,  நாம்  தமிழர் கட்சி சார்பில் தமிழழகனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஷகிலாவும், அமமுக கூட்டணியில் தேமுதிக உதயகுமாரும் முக்கிய  வேட்பாளர்களாக களம் இறங்கினர். கடந்த 2016 தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் பாமக இடையே மும்முனைப் போட்டி காணப்பட்ட நிலையில், இந்த முறை பாமகவுக்கும்  திமுகவுக்கும் இடையேயாதான் கடுமையான போட்டிக் காணப்பட்டது. இந்தத் தொகுதியில் வன்னியர்கள் 45 சதவீதம் பேர் உள்ளனர். இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆதரவு திமுகவுக்கு  காணப்பட்டாலும், அதிமுகவின் வலுவான வாக்கு வங்கியுடன் ஒப்பிடுகையில், வெற்றி வாய்ப்பு என்பது ஜி.கே.மணிக்கே என பாமகவினர்  நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர்.



from Latest News

Post a Comment

0 Comments