Ticker

6/recent/ticker-posts

Ad Code

துரைமுருகன்: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

ஒன்பது முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு இந்த முறை 'சீட்' வழங்கக்கூடாது என அவரது சொந்த தொகுதியிலிருந்தே உடன்பிறப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இருப்பினும் மூத்த தலைவரின் மனம் நோகக்கூடாது, சீட் மறுக்கப்பட்டால் அதனால் கட்சியில் தேவையற்ற சலசலப்புகள் ஏற்படலாம் என்பதையெல்லாம் மனதில்கொண்டே,தொடர்ந்து 10 வது முறையாக காட்பாடியில் களமிறக்கப்பட்டார் துரைமுருகன். தி.மு.க., சார்பில், காட்பாடியில் முதல் முறையாக அவர், 1971 ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் 1977, 1980 ஆம் ஆண்டுகளில், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மீண்டும் 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் இத்தொகுதியில் போட்டியிட்ட அவர், 1984 மற்றும் 1991 ஆண்டு தேர்தல்களில் என இரு முறை மட்டுமே தோல்வியடைந்தார். எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், 12 முறை அவர் தேர்தலை சந்தித்துள்ளார் துரைமுருகன்.

துரைமுருகன்

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில், துரைமுருகன் பெற்ற வாக்குகள் 90,534. அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு 66,588 வாக்குகள் பெற்ற நிலையில், துரைமுருகன் 23,946 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த முறை துரைமுருகனை எதிர்த்து வி. ராமு (அதிமுக), எம்.சுதர்சன்(ஐஜேகே), ச. திருக்குமரன் (நாதக), ஏ.எஸ்.ராஜா (அமமுக) மற்றும் பல சுயேட்சைகள் போட்டியிட்டனர். கட்சி தலைமை சீட் கொடுத்தாலும், சொந்த தொகுதியில் மக்களிடையே துரைமுருகன் மீதான சலிப்பும், உடன் பிறப்புகளின் அதிருப்தியும் துரைமுருகனுக்கு கலக்கத்தைக் கொடுத்திருந்தது.



from Latest News

Post a Comment

0 Comments