நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் 2016 தேர்தல் முடிவே சர்ச்சைக்குள்ளான நிலையில், இந்தத் தேர்தலிலும் தமிழக அளவில் கவனம் ஈர்த்த தொகுதியாக பார்க்கப்பட்டது ராதாபுரம் தொகுதி. 1957 முதல் 2016 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, அதிமுக 2 முறை, திமுக 2 முறை, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2 முறை, தமாகா,தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறை இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளனர். கடந்த 2006-ல் இத்தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய எம். அப்பாவு வெற்றி பெற்றார். 2011-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட எஸ். மைக்கேல் ராயப்பன் வெற்றிபெற்றார்.
2016 தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவுக்கும், அதிமுக வேட்பாளர் இன்பதுரைக்கும் இடையேகடும் போட்டி காணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 203 தபால் வாக்குகளை எண்ணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சர்ச்சைக்குரிய 3 சுற்றுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணப்பட்டன. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்துக்கும் சென்ற இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்த தேர்தலே வந்துவிட்டது. இந்த முறையும் திமுக சார்பில் அப்பாவும், அதிமுக சார்பில் அதே இன்பதுரையும் போட்டியிட்டனர்.
from Latest News
0 Comments