மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று கொரோனா பரவலைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வீரியத்துடன் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது தொடர்பாக பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி, கொரோனாவை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளை அறிவித்து வருகிறார். இன்று அவர் தனது அமைச்சரவைக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் கொரோனாவால் நாடு சந்தித்து வரும் மோசமான சூழல் மற்றும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே ராணுவ தளபதி நரவனேயுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு ராணுவம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் தயார் நிலைகள் குறித்து மோடி ஆய்வு செய்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments