பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிப்பதாக தகவல்கள் வந்த நிலையில், தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களிடம் தற்போது ஒரு கோடி டோஸ்களுக்கு மேல் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல லட்சம் டோஸ்கள் அடுத்த சில நாட்களில் விநியோகிக்கப்படும் என்றும் ஹர்ஷ் வரதன் உறுதியளித்துள்ளார். 16 கோடி டோஸ்கள் மாநில அரசுகளுக்குத் தரப்பட்டிருப்பதாகவும் அதில் 15 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கினார்.ஒருநாள் கூட இடைவெளியே இல்லாமல் தினசரி தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் ஹர்ஷ் வரதன் தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments