Ticker

6/recent/ticker-posts

Ad Code

பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசியில் பேச்சு..! இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாக உறுதி

இந்தியாவுக்கு 22 டன் எடை கொண்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை 2 விமானங்களில் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.  ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கொரோனா தொற்று நோய் நிலைமை குறித்து புதினுடன் மோடி விவாதித்தார். கொரோனா வைரசின் இரண்டாவது அலைக்கு எதிரான போராட்டத்தில் தனது ஆதரவை வழங்கிய புதினுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் சில பதிவுகளை வெளியிட்டார். விண்வெளி ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, ஹைட்ரஜன் பொருளாதாரம் உள்பட பல்வேறு மாறுபட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து புதினுடன் பேசியதாக மோடி தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 22 டன்கள் எடை கொண்ட மருத்துவப் பொருட்களை 2 விமானங்களில் ரஷ்யா இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. சுமார் 20 லட்சம் மருந்துகள், 20 ஆக்சிஜன் மறுசுழற்சி உற்பத்தி சாதனங்கள், 75 வெண்டிலேட்டர்கள், 150 மருத்துவ மானிட்டர் கருவிகள் உள்பட தேவையான மருத்துவ உதவிகள் இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதனிடையே அமெரிக்கா உள்பட 15 நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், ரெம்டிசிவர் மருந்துகள், ஆக்சிஜன் வென்டிலேட்டர்கள், கோவிஷீல்ட் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் போன்ற ஏராளமான மருத்துவ உதவிகள் அடுத்த ஓரிடு நாட்களில் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments