Ticker

6/recent/ticker-posts

Ad Code

"கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும் ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லை" -டெல்லி அரசு

கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லை என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆம்ஆத்மி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 25ம் தேதி 490 டன்கள் ஆக்ஸிஜன் பெற்ற நிலையில் நேற்று 402 டன்கள் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் அவசர சிகிச்சைப் பிரிவைக் கணக்கில் கொண்டே ஆக்ஸிஜன் ஒதுக்கப்படுவதாகவும், சாதாரண வார்டுகளில் உள்ள நோயாளிகளை மத்திய அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே மருத்துவத்திற்கு தேவைப்படும் திரவ ஆக்ஸிஜனை போதிய அளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் ஆம்ஆத்மி கேட்டுக் கொண்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments