தடுப்பூசிகள் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் மிகப்பெரிய ஆயுதம் என்றும், எனவே தகுதியுடையவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் வீடு வீடாக வந்து பரிசோதிப்பவர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பின்னர், அருகிலுள்ள காய்ச்சல் முகாமிற்குச் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டால் பீதியடையாமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தீவிர அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் சிகிச்சை தேவையில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களில் 15 முதல் 25 விழுக்காடு வரையினருக்கு மட்டுமே உள்நோயாளிகளுக்கான சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் மிகப்பெரிய ஆயுதம் என்றும் எனவே தகுதியுடையவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று படுக்கைகளின் எண்ணிக்கை, திரவ ஆக்சிஜன் கையிருப்பு, தடுப்பூசிகள் மற்றும் தேவையான மருந்துகள் அனைத்தும் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவுதல் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களும் தவறாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதோடு, இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் 19 தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவு பெற 104 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments