Ticker

6/recent/ticker-posts

Ad Code

கும்பமேளா முடிவுக்கு வந்ததால் ஹரித்வாரில் இன்று முதல் ஊரடங்கு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளா முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று முதல் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது. கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பெருந்தொற்று பரவல் அதிகமாகக் காணப்பட்டதால், கும்பமேளா நாட்களைக் குறைக்கவேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், நேற்று நடந்த சஹி ஸ்நான் எனப்படும் புனித நீராடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் எந்த சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றவில்லை என்பதால் ஹரித்வார், ரூர்க்கி, லக்சர் மற்றும் பகவான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்த மாநில நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments