ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆந்திரே ரஸ்செல் 45 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா 82 ரன்களும், ஷிகர் தவான் 46 ரன்களும் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். 16 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்து டெல்லி அணி வெற்றி பெற்றது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments