கோவாவில் மே 3 அதிகாலை வரை நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் கடைகளைத் திறக்க அனுமதியில்லை. மக்கள் அதிகளவில் கூடும் சூதாட்ட கிளப்புகள் போன்றவையும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. பனாஜியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து சாலைகள் வெறிச்சோடின. வாகனங்களில் தேவையின்றி சுற்றுவோரை தடுப்புகள் அமைத்து போலீசார் வழிமறித்தனர். கடலோரங்களிலும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments