Ticker

6/recent/ticker-posts

Ad Code

அன்னியன் அம்பியாக அசத்திய சுட்டிப் பாப்பா..! அப்பிடியே சொறுவிருவேன்…!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கொடுரை சேர்ந்த அனிஷ் - ஆர்த்தி தம்பதியினரின் 4 வயது மகள் சப்துனிகா என்பவர் தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றிருந்தபோது, வீட்டு வேலை செய்யாத தனது அக்கா ப்ரீத்தியை மழலை மொழியில் அந்நியன் அம்பி பாணியில் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தனது தாயாருக்கு உடம்பு சரியில்லை என்றும், வேலை செய்யாததால் வீட்டை விட்டு போ என்றும் அடிச்சிறுவேன், சொறுகிருவேன் என்று சத்தம் போட்ட சப்துனிக்காவின் பேச்சு பலரை கவர்ந்து வருகின்றது. பெரிய மனுஷி மாதிரி பேசுகிறதே என்று பதற வேண்டாம், கேட்டதை பேசும் இந்த குட்டிப்பாப்பாவின் சுட்டித்தனமான மிரட்டல் கூட அழகுதான்..!

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments